பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
Jan 13, 2026, 11:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக நீதி என்பது பெயரில் இருப்பதை விட செயல்பாட்டில் இருப்பதே சிறந்தது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு. சீர்மரபினர் நலத்துறை, பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் மாணவர் விடுதிகளை “சமூகநீதி விடுதிகள் என்ற ஒரே குடையின் கீழ் இணைக்கும் திமுக அரசின் விளம்பரத் திட்டம் அபத்தமானது.

இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி. ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ நன்றாக ஓடுமா என்ற நகைச்சுவை வசனத்தைப் போல, போதிய ஆசிரியர்கள், குடிநீர், கழிவறை, தரமான உணவு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத அரசு மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு அவற்றின் பெயரை மட்டும் மாற்றி வைத்து சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுவெளியில் சாதிரீதியிலான கருத்துகளை முன் வைக்கும் தலைவர்களைக் கட்சியில் வைத்துக் கொண்டு, சாதிய இயக்கங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, சாதியை ஒழிக்கப் போவதாக போலித்தன அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவிற்கு, பல போராட்டங்களாலும் உயிர்த் தியாகங்களாலும் பெறப்பட்ட சமூகப் பாதுகாப்பினை அழித்தொழிக்க எந்த உரிமையும் இல்லை.

கேட்பாரற்று சிதிலமடைந்து கிடக்கும் அரசு விடுதிகளை சீர்செய்வதில் தான் அரசு கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வெறும் பெயர் மாற்றத்தைக் கொண்டு அவலத்தை மூடி மறைக்க முயல்வது ஒரு நல்ல தலைமைக்கு அழகல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, “சமூக நீதி விடுதி” என்ற பெயர் மாற்ற முடிவினைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், கேட்பாரற்று சிதிலமடைந்து கிடக்கும் அரசு மாணவர் விடுதிகளை சீர்செய்வதில் ஆளும் அரசு கவனம் செலுத்த வேண்டுமெனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நயினார் நாகேந்திரன்  வலியுறுத்தி உள்ளார்.

Tags: DMKMK Stalintnbjpசமூக நீதிSocial justice is better in action than in name: Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

Next Post

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies