தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே, பயணிகள் நிழற்குடை அமைக்கச் சாலையோரம் குடைகளை நட்டு வைத்து இளைஞர்கள் நூதன கவன ஈர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மரக்காவலசை ஊராட்சியில் உள்ள துறையூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் பயணிகள் நிழற்குடை அமைக்காததால் பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்கள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அரசின் கவனத்தை ஈர்க்க சாலையோரம் குடைகளை நட்டு வைத்து இளைஞர்கள் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.