விநாயகர் சதுர்த்தியையொட்டி மகாராஷ்டிராவில் வீடுகளில் வழிபடும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வீடுகளில் பொதுமக்கள் வைத்து வழிபடும் வகையிலான சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு அவற்றிற்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.