கோவையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் பிளேடால் தாக்கப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார்.
அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து புதூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மூர்த்தி மற்றும் மணி ஆகியோர் விக்னேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுபோதையில் நடைபெற்ற வாக்குவாதத்தின்போது விக்னேஷின் உடலில் பிளேடால் தாக்கிவிட்டு இருவரும் தப்பியோடினர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.