தமிழகத்திற்கான மாநில அரசின் கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் மாநில அரசின் கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.