சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!
Sep 29, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2025, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது அந்த விண்கலம் அனுப்பியுள்ள புதிய படங்கள், நிலவு குறித்த ஆய்வில் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

நிலவு குறித்து பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றன. நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, சந்திரயான்-1, சந்திரயான்-2, சந்திரயான்-3 என்ற 3  விண்கலன்களை இந்தியா இதுவரை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இதில் 2019ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் சமயத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. இருப்பினும் அதன் ஆர்ப்பிட்டர் தற்போது நிலவைச் சுற்றிவந்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து நிலவு குறித்த முக்கிய தகவல்களை அது பூமிக்கு அனுப்பி வருகிறது.

நிலவு பூமிக்கு அருகில் வரும்போது, அதன் மின்னணு அடர்த்தி அதிகரிக்கிறது என்பதைச் சந்திரயான்-2 விண்கலம்தான் அண்மையில் கண்டுபிடித்தது. இந்த தகவல் மூலம், எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவிற்குச் செல்லும்போது, அவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவின் தரையில் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பான புகைப்படத்தைச் சந்திரயான்-2 தற்போது அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் மாதம், Intuitive Machines என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவுக்கு ஒரு லேண்டரை அனுப்பியது. நிலவின் தென் துருவத்தில் IM-2 லூனார் என்ற அந்த லேண்டர் வெற்றிகரமாக இறங்கியது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த விண்கலம் பக்கவாட்டில் சாய்ந்து கவிழ்ந்ததால் அதனால் மேற்கொண்டு செயல்பட முடியவில்லை.

மார்ச் 7ம் தேதி அந்த லேண்டர் விபத்துக்குள்ளானது குறித்த சந்திரயான்-2 புகைப்படம் எடுத்தது. அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. Orbiter High Resolution Camera-வில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் லேண்டர் விபத்துக்குள்ளானது தொடர்பான துல்லியமான பல தகவல்களை வழங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த புகைப்படத்தை ஜெர்மனியில் உள்ள தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். நிலவில் உள்ள பள்ளங்கள் குறித்தும், இத்தகைய பள்ளங்கள் உள்ள பகுதிகளில் லேண்டர்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் இந்த புகைப்படங்கள் புதிய தகவல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும்,
சந்திரயான்-2 எடுத்த இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: சந்திரயான்-2நிலவுvISROஇஸ்ரோNew photo sent by Chandrayaan-2
Share
Tweet
SendShare
Previous Post

மாநில அரசின் கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Next Post

கோவை : உலக தாய்ப்பால் வாரத்தை ஒட்டி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Related News

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies