பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நா. பொதுச்சபையில் பேசிய அவர், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை இயல்பானதாக மாற்றும் முயற்சிகளை ஏற்க முடியாது என்றும் கூறினார்.
மேலும், பயங்கரவாதமும் நட்புறவும் ஒரே நேரத்தில் நீடிக்க முடியாது என பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார்.
















