மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றுவிட்டால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய தயாரா என உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.
தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் தவெக பொதுச்செயலாளர் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என தெரிவித்தார்.
அதேவேளையில் தவெக வெற்றி பெற்றால், உதயநிதி தனது கட்சிப் பதவியை ராஜிநாமா செய்வாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நல்ல மன்னன் போருக்குச் சென்று மக்களை பாதுகாப்பார் என்றும், ஆனால் சில மன்னர்கள் அந்தப்புரத்தில் மட்டுமே இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் என்றால் என்ன? அது ஒரு யுத்தம். அந்த யுத்தத்திற்குள் திடீரென வந்த இளவரசருக்கு அந்தப்புரத்தில் கற்றுக்கொண்ட ஆபாசம்தான் வாயில் வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
















