மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் 101 ரன்கள் விளாசினார்.
இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 296 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
விராட் கோலி 139 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 110 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-க்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றுள்ளது.
















