சீனாவின் ஜின்ஜியாங்கில் தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலத்தில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தொங்கு பாலத்தின் ஒருபகுதி அறுந்ததால் அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.