ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்களைத் தலையில் சுமந்து சென்று படவேட்டம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வாலாஜாபேட்டையில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் ஆடிமாத 4-ம் வெள்ளிக்கிழமையை ஒட்டி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் வன்னிவேடு பாலாற்றங்கரையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பால் குடங்களைச் சுமந்து ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பின்னர் நீண்ட வரிசையில் நின்று படவேட்டம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, ஓம் சக்தி பராசக்தி எனும் கோஷத்துடன் வழிபாடு நடத்தினர்.