சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வழக்கு விசாரணைக்காக அழைக்கச் சென்ற காவலரைத் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த கந்தசாமி, செல்லம்மாள் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகக் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எடப்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சாகித், நேரில் சென்று கந்தசாமியை வழக்கு விசாரணைக்காக அழைத்துள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த கந்தசாமியின் மகன் வேல்மணி, காவலர் சாகித்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் வேல்மணி உள்ளிட்ட இருவரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.