உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில் கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
ஹைதர்கரில் இருந்து பாராபங்கிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கனமழை காரணமாகப் பெரிய மரம் ஒன்று முறிந்து பேருந்து மீது விழுந்தது.
இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான பயணிகள் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.