மகளிர் கால்பந்து தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி இந்தியா 63வது இடத்தை பிடித்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம், மகளிர் கால்பந்து அணிக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
இதில் ஸ்பெயின் அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 2-வது இடத்திலும், ஸ்வீடன் 3வது இடத்திலும், ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடிய இங்கிலாந்து 4-வது இடமும் வகிக்கிறது. பிரேசில் 4-ல் இருந்து 7-வது இடத்துக்குச் சறுக்கியது. இந்தியா 7 இடங்கள் முன்னேறி 63-வது இடத்தை பிடித்துள்ளது.