நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு அமைய உள்ள இடத்தை கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தச்சநல்லூர் அருகே உள்ள இடத்தில் வரும் 17ம் தேதி தமிழக பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல், புதிய நிர்வாகிகளை நியமித்தல் மற்றும் கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மாநாட்டின் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநாட்டுக்கான மேடை அமைப்பு, பங்கேற்பாளர்கள் அமரும் இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் விரிவாக ஆய்வு செய்தார்.
இதனையடுத்து தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், அனைத்து ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், பாஜகவின் தேசிய தலைவர்களில் ஒருவரைச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.