சட்டவிரோத குடியேறிகள் காங்கிரசின் வாக்கு வங்கி என்பதால் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினார். இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அரசியல் சாசன சட்டம் வழங்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களின் வாக்குகளை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நம்பியிருப்பதாக கூறிய அமித்ஷா, வாக்கு வங்கி அரசியலை ராகுல்காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.