ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு சீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.
சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31-ம் தேதி, செப்டம்பர் 1-ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோடி கடைசியாக 2018-ம் ஆண்டு சீனா சென்றார்.
இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். வரும் 29-ம் தேதி தேதி ஜப்பான் புறப்படும் பிரதமர் மோடி அங்கு பயணத்தை முடித்த பிறகு அங்கிருந்து சீனா செல்ல இருக்கிறார்.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளின் மாநாடாக இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன்
அறிக்கை வெளியிட்டுள்ளார்.