உக்ரைன் போரின்போது, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது இருநாடுகளுக்கு மட்டுமல்ல, உலக பொருளாதாரத்திற்கே உதவியதாக தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால், இந்தியாவுக்கு 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கைகூடாததால், ரஷ்ய கச்சா எண்ணெயை டிரம்ப் ஆயுதமாக மாற்றியுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறியுள்ளது.
உக்ரைன் போருக்கு பின்னர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்த்த ஐரோப்பிய நாடுகள், இந்தியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பெற்றதாகவும், இதன் மூலம் இந்திய நிறுவனங்கள் இலாபம் ஈட்டியதாகவும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனநாயகம், இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் இந்தியாவிடம் டிரம்பின் விளையாட்டு பலிக்காது என்றும் தெரிவித்துள்ளது. ரஷ்யா உடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் சர்வதேச நாடுகளுக்கும், உலக பொருளாதாரத்திற்கும்பலனளிப்பதாக நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.