மாநில கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழக மக்களை திமுக அரசு இருட்டடிப்பு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எல்.முருகன், ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடே மாநில கல்வி கொள்கை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைமுறையில் இருப்பதையே புதிய கொள்கையாக அறிவித்து, திமுக அரசு அரைத்த மாவையே அரைக்கிறது என விமர்சித்துள்ள எல்.முருகன்,
யாரும் புரிந்து கேள்வி கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே புரியாத தமிழில் மாநில கல்வி கொள்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மும்மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? என வேதனை தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகத்தில் SSLC பயிலும் மாணவர்களுக்கு, தமிழ் எழுத்துக்கள் கூட சரி வர தெரியவில்லையே ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.