தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி உடைந்ததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வீரக்குடி பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கால்வாயின் கீழ்குமிழி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உடைந்து சேதமடைந்தது.
இதனைச் சீரமைக்காததால் மணக்காடு வாய்க்காலுக்குத் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தண்ணீர் செல்லாததால் 250 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக கீழ்குமிழியை சீரமைத்து தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.