சிவகங்கை அருகே உலக நன்மை வேண்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.
சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கோஷ்வரர் சுவாமி திருக்கோயிலில், ஆடி 4வது வெள்ளிக்கிழமையையொட்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு, உலக நன்மை மற்றும் மழை வேண்டி மந்திரங்களைக் கூறி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். பின்னர் திருவிளக்குக்குத் தீபாராதனை காட்டி ஏழுமுக அம்மனை வழிபட்டனர்.