உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உலர்ந்த பூக்கள் மற்றும் தாவர பாகங்களை கொண்டு தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ராக்கி கயிற்றை உருவாக்கி உள்ளது.
நாளை ரக்சா பந்தன் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் தனித்துவமான ராக்கி கயிறுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் லக்னோவில் உள்ள தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மலர் கைவினைப் பொருட்களை கொண்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ராக்கி கயிறு தயாரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற கருப்பொருளில் இதைச் செய்ததாகத் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அஜித் குமார் ஷசானி தெரிவித்துள்ளார்.