காமராஜர் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதற்குக் காங்கிரஸ் கட்சியினர் இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி பேசியது, காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காங்கிரஸ் கட்சி என்றாலே இரண்டு மூன்று கோஷ்டிகள் இருக்கும் என்றார்.
மேலும் காமராஜர் இறந்தபோது அவரது உடலை அடக்கம் செய்வதில் கோஷ்டி பூசல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் மீது இப்படி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி ஆர்.எஸ்.பாரதி பேசியது காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.