நாமக்கல் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சாலையை ஆக்கிரமித்து தனிநபர்கள் கம்பி வேலி அமைத்துள்ளதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குமாரபாளையம் அடுத்த களியனூரில் மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை 20 ஆண்டுகளாகத் தனி நபர்கள் சிலர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் விவசாய நிலங்களுக்கு இடு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் 3 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து மக்களுடன் முதல்வர், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று மனு அளித்தும் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை அலைக்கழிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.