நானி நடிக்கும் தி பாரடைஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தசரா படத்தைப் போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது.
நானியின் வித்தியாசமான தோற்றம், உடல் பாவனை என அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் 2026 மார்ச் 26ம் தேதி வெளியாகவுள்ளது.