ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட 6 விமானங்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு முழுவதும் அழிக்கப்பட்டதாகக் கூறினார்.
இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு கண்காணிப்பு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறிய ஏ.பி.சிங், சுட்டு வீழ்த்தப்பட்ட 5 பாகிஸ்தான் போர் விமானங்களில் F-16 ரக விமானமும் அடங்கும் என்றார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது லஷ்கர்-இ-தொய்பா தலைமையகம் முழுவதும் அழிக்கப்பட்ட செயற்க்கைகோள் படங்கள் மூலம் தெளிவாக விளக்கம் அளித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவம், விமானப் படைக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று கூறிய ஏ.பி.சிங்,
இந்திய ராணுவம், விமானப் படை முழு சுதந்திரத்துடன் செயல்பட்டதாகத் தெரிவித்தார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விமானப் படையின் பங்களிப்பு அளப்பரியது என்று கூறிய ஏபி சிங்,
பாகிஸ்தான் கெஞ்சியதாலேயே போர் நிறுத்தப்பட்டதாகவும், யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலும் போரை நிறுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.