திருச்சி மாநகரில் போதிய பேருந்து வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்குக் கடந்த மாதம் திறக்கப்பட்டது.
இதனால் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செல்வதற்காக மாநகர பேருந்துகள் வழித்தடம் மாற்றி இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் மற்ற பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடும் அவதியடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.