ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார்.
பீகாரில் பசுமையைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மாநில அரசு 2012-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் பண்டிகையை ‘பீகார் விருக்ஷ் சுரக்ஷா திவாஸ்’ ஆக கடைப்பிடித்து வருகிறது.
அதன்படி முதலமைச்சர் நிதிஷ்குமார் மரக்கன்றுகளை நட்டும், மரங்களுக்கு ராக்கி கயிற்றையும் கட்டினார். இதேபோல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி மரத்திற்கு ராக்கி கயிற்றைக் கட்டினார். அதைத்தொடர்ந்து அவருக்குப் பெண்கள் ராக்கி கயிற்றைக் கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.