மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை திமுக கிளை செயலாளர் மிரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வைரவநத்தம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் நெல் குவியல்கள் மழையில் நனைந்தன.
மேலும், அதிகாரிகள் மற்றும் திமுக கிளை செயலாளர் நாகமலை ஆகியோர், ஒரு நெல் மூட்டைக்கு 60 ரூபாய் வசூலிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை, வைரவநத்தம் திமுக கிளை செயலாளர் நாகமலை மிரட்டியுள்ளார்.