கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து முதலாவதாக, பெங்களூரு – பெலகாவி, அமிர்தசரஸ் – ஸ்ரீமாதா வைஷ்ணவ்தேவி கத்ரி, அஜ்னி – புனே ஆகிய வழித்தடங்களில், 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இது நாட்டின் 150வது வந்தே பாரத் ரயிலாகும். இதனையடுத்து வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனை தொடர்ந்து பெங்களூருவில் ராஷ்ட்ரீய வித்யாலயா சாலை எனும் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அதில் பயணம் செய்த பிரதமர் மோடி, பயணிகளுடன் கலந்துரையாடினார்.