கவிஞர் வைரமுத்துவை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை, சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
சென்னையில் நடைபெற்ற கம்பன் விருது வழங்கும் விழாவில், கவிஞர் வைரமுத்து, ராமரை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி, தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர், வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.