சென்னை குரோம்பேட்டையில் ரயில் நிலையம் செல்ல அமைக்கப்பட்டுள்ள தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குரோம்பேட்டை சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் செல்வதற்காக தானியங்கி படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை பெருவாரியான மக்கள் பயன்படுத்திவந்த நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி படிக்கட்டு பழுதடைந்தது.
இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ள பயணிகள், உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.