நாமக்கலில் சட்டவிரோத கிட்னி மாற்று அறுவை சிகிச்சை வழக்கின் விசாரணை குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் முறைகேடாகக் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றவாறு முறைகேடாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும், நெருங்கிய உறவினர் அல்லாத கொடையாளரிடமும் பணத்துக்காகத் தரகர்மூலம் உறுப்பு பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த முறைகேட்டில் ஆனந்தன், ஸ்டான்லி மோகன் ஆகிய இரு தரகர்கள் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 2 மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதியை ரத்து செய்ய விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.