கோவை மாவட்டம் ஆழியார் அணை பூங்கா, அடிப்படை வசதிகள் இல்லாமல் பராமரிப்பின்றி காணப்படுவதாகச் சுற்றுலா பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை அடுத்த ஆழியார் அணைப்பகுதியில் உள்ள பூங்காவுக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்து பொழுதைபோக்குவது வாடிக்கை.
பூங்காவில் நுழைவுக் கட்டணம வசூலிக்கப்படும் நிலையில், அடிப்படை வசதிகளோ, குடிநீர் வசதியோ இல்லை என்பது சுற்றுலா பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு அணை பூங்காவைப் பராமரிக்கவும், படகு சவாரியை மீண்டும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.