நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்குக் கிருஷ்ணா, கோதாவரி, கோசி, ஹூக்ளி ஆகிய ஆறுகளின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பாபா கரக் சிங் மார்க்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 184 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது, குடியிருப்பு வளாகத்தில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூரும் வகையில் பிரதமர் மோடி மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியனார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வளாகத்தைத் திறந்து வைத்தது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனத் தெரிவித்தார்.
பாபா கரக் சிங் மார்க்கில் கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புகளுக்குக் கிருஷ்ணா, கோதாவரி, கோசி, ஹூக்ளி ஆகிய நதிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.