மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மையத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் திறந்து வைத்தார்.
இந்தூரில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு மிகக்குறைந்த செலவில் மருத்துவ உதவிகளைச் செய்யும் வகையில் புற்றுநோய் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், பராமரிப்பு மைய கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதையடுத்து புற்றுநோய் பராமரிப்பு மையத்தின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து விழாவில் பேசிய அவர், குறைந்த செலவில் மருத்துவம் என்பது மக்களின் அடிப்படை தேவையாக இருப்பதாகக் கூறினார். இன்றைய சூழலில் உயர்தர மருத்துவ சேவைகளைப் பெற மக்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டி உள்ளதாகக் கூறிய மோகன் பாகவத், இது போன்ற புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.