8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேலும், தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையைத் தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் எச்சரித்த நீதிபதிகள், தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா என்று கேள்வி எழுப்பினர்.