கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படம் உலக அளவில் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது.
படம் வெளியாக இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனம், சட்டவிரோதமாகப் படத்தை இணையதளங்களில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூலி படத்தைச் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதை தடுக்க 36 இணையதள சேவை நிறுவனங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.