கோவை மாவட்டம், புதூர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையைக் காட்டு யானை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதூர் பகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதியையொட்டியுள்ள அறிவொளி நகரில் உள்ள நியாயவிலைக் கடையைக் காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், யானையின் நடமாட்டத்தை கண்டறிந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.