காஞ்சிபுரம் மாவட்டம், மெய்யூர் ஓடையில் குறித்த காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
சின்னலாம்பாடி ஊராட்சியில் உள்ள மெய்யூர் ஓடையில் கடந்த ஜூலை 1-ம் தேதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.
இதனை நம்பி 10-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் நெல்மணிகளை அறுவடை செய்து திறந்த வெளியில் குவியலாகக் கொட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் குறித்த காலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், மழையில் நனைந்த நெல்மணிகள் முளைத்து வீணாகின. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.