பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா உடனான போர் நிலவரம் குறித்து விளக்கினார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ரஷியா உடனான போருக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது பற்றிய இந்தியாவின் நிலைபாட்டை எடுத்துக் கூறியதாக தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவர தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யுமென உறுதியளித்ததாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியுடன் உரையாடியது குறித்து பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவலளித்துள்ளார்.