திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டதாகவும் கூறினார்.
விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மலர் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிமுக வழங்கிய மானியத்தை திமுக அரசு நிறுத்திவிட்ட என்றும் இபிஎஸ் சாடினார்.