மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள மண்டபமொன்றில் அத்திக்கடவு நாயகன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், அடுத்து வரும் பட்ஜெட் அனைத்து விவசாயிகளையும் 5 மடங்கு ஊக்குவிக்கும் வகையில் அமையும் என தெரிவித்தார். பின்னர் கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சிகரமான செய்தி காத்திருக்கிறது என கூறிய அண்ணாமலை, அதுகுறித்த அறிவிப்பை அதிகாரிகள் வெளியிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை ஆகஸ்ட் 22-க்குள் செயல்படுத்தாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், தூய்மை பணியாளர்கள் விவகாரத்திற்கு தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.