கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை இலவச ஆம்புலன்சில் எடுத்து செல்ல ஊழியர்கள் பணம் கேட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அருமனை அருகே ஆலஞ்சோலை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் பெண்ணான ஸ்டெல்லா என்பவர் திருமணம் ஆகாமல் உறவினர் வசந்தா என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஸ்டெல்லா தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஸ்டெல்லாவின் உடலை இலவச ஆம்புலன்சில் எடுத்து செல்ல ஊழியர்கள் 900 ரூபாய் கேட்டதாக உறவினர் வசந்தா தெரிவித்துள்ளார். மேலும், குளிர்சாதன பெட்டிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றதாகக் கூறிய அவர், அரசின் இலவசத் திட்டங்களிலும் பணம் வசூல் வேட்டை நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.