துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே, காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.
தலைநகர் போகடாவில் தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்றபோது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அவரது தலையில் 2 குண்டுகளும், காலில் ஒரு குண்டும் பாய்ந்தன.
மைய நரம்பு மண்டலத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவிருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. இதனையடுத்து அந்நாட்டின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.