சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார்.
இந்தியாவை விட அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் சீனாவுக்கு அதிக வரியை விதிக்காதது ஏன் என்று கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், சீனா மீதான வரியை 90 நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.