நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் கிடந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது கட்டுக்கட்டாக பணம் எரிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்தர் மோகன் ஶ்ரீ வாஸ்தவா, உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர் பி.வி ஆச்சார்யா அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.