ஓசூரில் அதிமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
3ஆம் கட்டமாகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, பாகலூர் அருகே ஹவுஸிங் போர்ட் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேற்கு மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
அலுவலக வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த இபிஎஸ், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓசூரை அதிமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.