ராகுல்காந்தி தெரிவித்த புகார் தொடர்பாகச் சொந்த கட்சியான காங்கிரசை விமர்சித்துப் பேசிய, கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் விடுபட்டதாகத் தேர்தலை ஆணையத்தை ராகுல்காந்தி விமர்சித்திருந்தார்.
இது குறித்து கர்நாடகா அமைச்சர் ராஜண்ணா, காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்த போதும் வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருந்தார்.
சொந்த கட்சி குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ராஜண்ணா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.