சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நடைபெறாத பணிகளுக்குக் கணக்குக் காட்டி பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளின் அனுமதியுடன் கடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளின் பதிவேடுகளை பத்து ரூபாய் இயக்கத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில், மூக்கனூர் ஊராட்சியில் நிதி ஒதுக்கீடு சம்பந்தமான பதிவேடுகளை முறையாகப் பராமரிக்காமல் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜா, செயல் அலுவலர் குமார் ஆகியோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களைத் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தியது ஆய்வில் தெரியவந்துள்ளதாக பத்து ரூபாய் இயக்கத்தினர் கூறியுள்ளனர்.